உள்நாடு

மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிய தீர்மானம்

(UTV|கொழும்பு) – மத்திய வங்கி பிணை முறி விநியோகம் தொடர்பான தடயவியல் கணக்காய்வு அறிக்கை தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறிவதற்கு அரசாங்க நிதி பற்றிய குழு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, திறைசேரிமுறி வழங்கல் குறித்த தடவியல் அறிக்கை தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் சுய அவதானிப்புகளை கேட்டறிவதன் முக்கியத்துவத்தை குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தினார்.

அதன்படி, எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள குழுவின் அடுத்த கூட்டத்தில் மத்திய வங்கியின் அவதானிப்புகளை கேட்டறியும் நோக்கில் இலங்கை மத்திய வங்கியின் அதிகாரிகளை அழைக்குமாறு குழு அலுவலர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.

Related posts

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சுக்கு புதிய செயலாளர் நியமனம்

editor

இலங்கை தயார் எனில் IMF தயார்

வலுவான உணவுப் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்பிற்கு பலம்வாய்ந்த தரவு முறைமை அவசியம்

editor