சூடான செய்திகள் 1

மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடைய கார் பொலிசாரினால் கண்டுபிடிப்பு

(UTV|COLOMBO) துபாயில் கைதான பிரபல பாதாள உலக குழுத் தலைவன் மாகந்துரே மதூஷின் சட்ட ரீதியற்ற மனைவியுடையதென கூறப்படும் கார் ஒன்று பாதுக்கை, போரகெதர பிரதேசத்தில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி இன்று(09) காலை குறித்த கார் மீட்கப்பட்டுள்ளது.

அந்த காரை சோதனை செய்த போது எவ்வித அனுமதிப் பத்திரங்களும் இல்லை என்பதுடன், அனுமதிப் பத்திரங்கள் இல்லாத காரணத்தால் காரை மறைத்து வைத்திருந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கார் ஏதாவது குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

 

 

 

Related posts

சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுன கட்சிகளுக்கிடையிலான ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று 

ஓய்வு பெற்ற ஆசிரியர்களை மீண்டும் சேவையில் இணைப்பதற்கு வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் எதிர்ப்பு

எதிர்வரும் 23 ஆம் திகதி வாக்கெடுப்பு