உள்நாடுபிராந்தியம்

மதுபோதையில் பஸ்ஸை செலுத்திய சாரதி கைது

மதுபோதையில் பஸ்ஸை செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கவனக்குறைவாக செலுத்தப்படும் பஸ் ஒன்று தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் களுத்துறை, பண்டாரகமை, களனிகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பாணந்துறை – ஹொரணை தனியார் பஸ் சாரதி ஒருவர் ஆவார்.

சந்தேக நபரை கைது செய்யும் போது பஸ்ஸில் சுமார் 50 பயணிகள் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related posts

14 வயது சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பெண்

editor

முன்னாள் அமைச்சர் கெஹெலியவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிரான வழக்கு மீதான விசாரணை – திகதி குறிப்பு!

editor

லங்காபுர பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் ஒருவருக்கு கொரோனா