உள்நாடுபிராந்தியம்

மதவாச்சி பகுதியில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களுடன் 4 பேர் கைது

போலி நாணய தாள்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அனுராதபுரத்தின் மதவாச்சி பகுதியில் 5,000 ரூபாய் போலி நாணயத்தாள்களில் 145யும் மற்றும் அவற்றை அச்சிடப் பயன்படுத்தப்படும் பல மடிக்கணினிகள், கணினிகள் மற்றும் பிற உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைதான சந்தேக நபர்களிடமிருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இந்த மோசடியில் ஈடுபட்ட மற்ற சந்தேக நபர்களையும் ஹபரணை பொலிஸார் கைதுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேக நபர்கள் மதவாச்சி பகுதியில் போலியான நாணயத்தாள்களை அச்சிட்டு, ஹபரணை பகுதிக்கு வந்து அவற்றை மாற்றிக் கொண்டதாகவும், இந்த மோசடி நீண்ட காலமாக நடைபெறுவதாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

வடக்கு – கிழக்கில் மக்கள் மத்தியில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட வேண்டும் – சுமந்திரன்

editor

சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை

இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள்