உள்நாடுபிராந்தியம்

மண்வெட்டியால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொடூரமாக கொலை – ஒருவர் கைது

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹுலன்னுகே 12வது தூண் பகுதியில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (22) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் 55 வயதுடைய பொத்துவில் – ஹுலன்னுகே பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் என தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட தகராறின் காரணமாக இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய 59 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சடலம் ஹுலன்னுகே வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பரீட்சைகள் தொடர்பிலான அறிவித்தல்

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவருக்குப் பிணை!

இரவு கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அதிகாலை கண் விழிக்கவில்லை – உயர்தரப் பரீட்சைக்கு தயாராகிய மாணவி திடீர் மரணம்

editor