உள்நாடுபிராந்தியம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் வாணி விழா கொண்டாட்டம்!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் இன்றைய தினம் வாணி விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதி தவிசாளர் அ.வசீகரன் ,பிரதேச சபை உறுப்பினர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது பக்தி பூர்வமாக பஜனை நிகழ்வினை தொடர்ந்து , கலை கலாச்சார நிகழ்வுகள், நடனங்கள் என பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றதை தொடர்ந்து , முப்பெரும் தேவிகளுக்கு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

-ஸோபிதன் சதானந்தம்

Related posts

வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தாலும் வாக்கை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை – தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க

editor

இன்று மின் கட்டணம் குறையுமா ?

பொலிஸ் ஊடக பணிப்பாளராக கே.பி.மனதுங்க நியமனம்

editor