அரசியல்உள்நாடு

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு 140 மில்லியன் செலவில் அபிவிருத்தி – தவிசாளர் வினோராஜ்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்கு 140 மில்லியன் செலவில் அபிவிருத்தி எனவும் தவிசாளராக தான் பொறுப்பேற்று 04 மாதங்களில் பாரிய அபிவிருத்தி செய்தேன் எனவும் தவிசாளர் மே. வினோராஜ் தெரிவிப்பு

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 05 வது அமர்வு தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தலைமையில் இன்றைய தினம் (14 ) நடைபெற்றது.

இவ் அமர்வுக்கு ஆளுங்கட்சி எதிர்கட்சி உறுப்பினர்கள் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது பிரதேச சபையின் தவிசாளராக வினோராஜ் பதவி ஏற்ற பின்னர் 140 மில்லியன் நிதி செலவில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும் கருத்து தெரிவித்தார்.

இதன் போது சபை ஆரம்பத்தில் அமளி துமளியுடன் கூட்டம் ஆரம்பமானது.

பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன், திண்மக் கழிவுகளை தரம் பிரித்து வைத்தால் மாத்திரமே எவராக இருந்தாலும் கழிவுகள் அகற்றப்படும் என தவிசாளரால் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதுடன் , எதிர்கால கால அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

-ஸோபிதன் சதானந்தம்

Related posts

மக்கள் காங்கிரஸுக்கு வழங்கப்படும் ஆணை, சமூக விடிவுக்கு வித்திடும் – முன்னாள் அமைச்சர் ரிஷாட்

இரண்டாம் வருட மாணவர்களுக்கு பல்கலைக்குள் நுழையத் தடை

சிவனொளிபாத மலை புனித யாத்திரை நாளை!