உள்நாடுபிராந்தியம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்கு 30 பதிலீட்டு ஊழியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 15.09.2025/170ம் இலக்க 2025.09.15 தீர்மானத்திற்கமைய மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் அவர்களினால் 30 பதிலீட்டு ஊழியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் (01) பிரதேச சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை பிரதி தவிசாளர் அ. வசீகரன் பிரதேச சபை பதவி நிலை உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் தூய்மையானதும் , அழகானதுமான மண்முனை தென் எருவில் பற்றினை உருவாக்க எண்ணுவதாகவும் பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் தெரிவித்தார்.

-ஸோபிதன் சதானந்தம்

Related posts

நாம் இதுவரை பெற்ற வெற்றிகளை உறுதிப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில்

editor

சதொச விற்பனை நிலையங்களை அதிகரிக்க தீர்மானம் – வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க

editor

கற்பிட்டி, பள்ளிவாசல்துறை விபத்து ஒருவர் பலி!