உள்நாடுபிராந்தியம்

மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் ஹிந்து சமயப் பாரம்பரியத்தின் அடிப்படையில் வாணி விழா (சரஸ்வதி பூஜை) இன்றையதினம் (29) மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலய பொறுப்பதிகாரி சிவபாலன் சிவஈஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

கல்வி, அறிவு, கலைகளை வழிபடும் தெய்வமான சரஸ்வதி தேவிக்கு பூஜைகள் செய்யப்பட்டதுடன், மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் பிரார்த்தனையும் இடம்பெற்றது.

மேலும், ஒவ்வொரு ஆண்டும் இவ்விழா மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் ஆன்மிக சக்தியை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் நடாத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில், மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

-தில்சாத் பர்வீஸ்

Related posts

பேருந்து கட்டண திருத்தத்தை கணிப்பிடுமாறு பணிப்புரை

களுத்துறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நீர்வெட்டு

வீதி விபத்தில் மூவர் பலி