உள்நாடு

மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (13) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என்று தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தில், வெலிமட, பசறை, ஹாலிஎல, பதுளை, கண்டி மாவட்டத்தில் மெததும்பர, பாததும்பர, உடுதும்பர, குருநாகல் மாவட்டத்தில் ரிதீகம, மாத்தளை மாவட்டத்தில் உள்ள இரத்தோட்டை, உக்குவெல, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை மற்றும் ஹங்குரான்கெத்த பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி

மஹிந்த தரப்புடன் இருப்பவர்களுடன் எப்போதும் இணையப் போவதில்லை- சஜித்

திருமணத்திற்கு செல்ல தயாரான நான்கு வயது சிறுமி – ஆற்றுக்குள் விழுந்து உயிரிழந்த சோக சம்பவம்

editor