உள்நாடு

மண்சரிவு அபாயம் அதிகரிப்பு – அனைத்து ரயில் சேவைகளும் இரத்து

நிலவும் மோசமான காலநிலை காரணமாக இன்று (28) காலை 6 மணிக்குப் பிறகு அனைத்து வழித்தடங்களிலும் ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது.

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே மேலதிக பொது முகாமையாளர் சந்திரசேன பண்டார தெரிவித்தார்.

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பல ரயில் பாதைகளில் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளது.

மேலும் வெள்ளம் மற்றும் மரங்கள் விழும் அபாயமும் அதிகரித்துள்ளது.

அதன்படி, நாடு முழுவதும் நிலவும் இந்த அபாயகரமான சூழ்நிலைகள் காரணமாக அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

Related posts

அனுர குமாரவுக்கு மதமில்லை: நான் கட்டிய நூலை தரையில் வீசினார்

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த “INS ரணா” இந்திய கப்பல்

editor

தேசபந்துவின் மனைவி மற்றும் மகனிடம் CID வாக்குமூலம் பதிவு

editor