வகைப்படுத்தப்படாத

மட்டக்குளியில் நபரொருவர் சுட்டுக் கொலை

(UDHAYAM, COLOMBO) – கொழும்பு – மட்டக்குளி – ஜூபிலி வீதியில் நபரொருவர் இன்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியில் பயணித்து கொண்டிருந்த போது, உந்துளியில் வந்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளவர் 24 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.

சம்பவத்தின் போது முச்சக்கர வண்டியில் அவரது மனைவியும், ஒரு பிள்ளையும் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

நான்கு கங்கைகளின் நீர் மட்டம் உயர்வு – மக்கள் அவதானம்

இலங்கைக்கான அடுத்தக் கட்ட கடன்தொகை

வெனிசுலா அதிபர் தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி