மட்டக்களப்பு கருவப்பங்கேணி பகுதியில் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருளுடன் பெண்ணொருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 1 கிலோ கிராம் கேரள கஞ்சா, 50 கிராம் ஐஸ் மற்றும் 25 கிராம் ஹெரோயின் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 35 வயது எனவும், ஏனைய இருவரும் 24 மற்றும் 34 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சந்தேகநபர்கள் சிறிது காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவரும் தற்போது அதே குற்றச்சாட்டில் சிறையில் உள்ளார் என்றும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.