உள்நாடுபிராந்தியம்

மசாஜ் நிலையத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து மூன்று பெண்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த இரு பொலிஸார்

மசாஜ் நிலையத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைந்து, முகாமையாளரையும் அங்கு பணிபுரியும் நான்கு பெண்களையும் மிரட்டி மூன்று பெண்களைப் பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு, தப்பிச் சென்ற இரண்டு கான்ஸ்டபிள்களில் ஒருவரை கைது செய்துள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்தனர்.

பொரளை பகுதியில் உள்ள ஒரு மசாஜ் நிலையத்தில் பெண்கள் குழு ஒன்று இந்த சம்பவத்தை எதிர்கொண்டுள்ளது.

பொலிஸாரின் அவசர இலக்கத்துக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில், அங்கு பொலிஸார் சென்றபோது அவர்களைக் கண்டு ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் மேல் மாடியிலிருந்து கீழே வீழ்ந்து காயமடைந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் பொலிஸ் விசேட பணியக தலைமையகத்தில் பணிபுரியும் ஒரு கான்ஸ்டபிள் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தப்பியோடிய மற்றையவர் பொலிஸ் சேவையிலிருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஒரு கான்ஸ்டபிள் ஆவார்.

இது தொடர்பில் பொரளை பொலிஸாரும் கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Related posts

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது

வெளிநாட்டவர்களுக்கான வருகை மற்றும் புறப்பாடு சேவைகளுக்கான ஒன்லைன் வசதி

அஷ்ரபை பண்டப்பொருளாக கூவி விற்கும் அரசியலை, உடன் ஹரீஸ் எம்.பி. கைவிட வேண்டும் – ஆசாத் சாலி