உள்நாடு

“மக்கள் பலத்தை காட்ட தயாராகும் மொட்டுக்கட்சி- முதற்கூட்டம் அனுராதபுரத்தில்”

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை இலக்காகக்கொண்டு நாடளாவிய ரீதியில் தொகுதிவாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது பொதுக்கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கலாவெவ தொகுதியின் பிரதம அமைப்பாளர் எஸ்.எம். ரஞ்சித் சமரக்கோன் குறிப்பிட்டுள்ளார்.

26 ஆம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு அனுராதபுரம், தலாவ நகரில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பொதுஜன பெரமுனவின் இளைஞர் அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள், அனைத்து செயற்பாட்டாளர்களும் கிராம மட்டத்தில் அணிவகுத்து கலந்து கொள்ளவுள்ளனர்.

அரசியல் தளத்தில் எதிரணியினர் எவ்வளவு அவதூறு செய்தாலும், பொதுஜன பெரமுனவின் பலத்தை எதிர்வரும் 26ஆம் திகதி நாட்டுக்கு எடுத்துக் காட்டப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மேல்மாகாணத்தில் விசேட சோதனை நடவடிக்கை

தேசபந்து தென்னகோன் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

editor

தங்கம் மற்றும் நாணய விலை குறித்த தகவல்