அரசியல்உள்நாடு

மக்கள் ஆணை இல்லாதவர்கள் இன்று ரணில் தலைமையில் ஒன்று சேர்கிறார்கள் – கருணைநாதன் இளங்குமரன் எம்.பி

மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் இன்று கூட்டுச் சேர கூட்டம் நடத்துகின்றனர் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் தெரிவித்தார்.

நேற்று (16) கட்சியின் யாழ். சாவகச்சேரி அலுவலகத்தில் ஊடக சந்திப்பை போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உள்ளூராட்சி சபை தேர்தலில் மக்களின் ஆணை மூலம் 266 சபைகளை பெரும்பான்மையாக பெற்று இருக்கின்றோம்.

மக்கள் ஆணை இல்லாதவர்கள் இன்று ஒன்று சேர்கிறார்கள் ரணில் தலைமையில், இதே ரணிலையும் ரணில் அரசாங்கத்தையும் மக்கள் ஒட்டுமொத்தமாக விரட்டி அடித்து உள்ளார்கள்.

இவர்கள் மக்களை அணி திரட்டுவதை விட்டு அவர்கள் அணி திரட்டுகின்றார்கள் என தெரிவித்தார்.

-பிரதீபன்

Related posts

தசுன் ஷானக 85,000 அமெரிக்க டொலர்களுக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்!

77 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி

editor

நேற்று கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கடற்படையினர்