அரசியல்உள்நாடு

மக்களின் பிரச்சினைகளை ஊடகங்களுக்கு கூற முன்னர் என்னிடம் எத்திவையுங்கள் – தீர்வை தருகிறேன் என்கிறார் தவிசாளர் பாஸ்கரன்

பொதுமக்களாகிய நீங்கள் பிரதேச சபை சொத்துக்களில், பிரதேச சபை மூலம் வழங்கப்படும் சேவைகளில் குறைபாடுகள் காணப்பட்டால் நீங்கள் நேரடியாக ஊடகங்களுக்கோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ தெரிவிப்பதற்கு முன்னர் என்னிடம் அல்லது பிரதேச சபை முறைப்பாட்டு இலக்கத்திற்கு அறிவியுங்கள் என காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி மக்களுக்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் எஸ். பாஸ்கரன் அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.

அவரது அறிவிப்பில் மேலும், மக்களின் பிரச்சினைகள், குறைநிறைகளை 074 143 4646 எனும் இலக்கத்திற்கு  அல்லது கடிதம் மூலமாகவோ நேரடியாகவோ பிரதேச சபை அலுவலகத்திற்கு வந்து தெரிவியுங்கள்.

அவற்றை விரைவாக தீர்த்து வைப்பதற்கான நடவடிக்கை என்னால் மேற்கொள்ளப்படும் என்பதனை அறியத்தருகின்றேன்.

மேலும் காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரதேச சபைக்கு சொந்தமான சொத்துக்களை பராமரித்தல், புணரமைத்தல், பேணிப் பாதுகாத்தல் போன்ற விடயங்களில் தவிசாளராக நான் கூடுதலான அக்கறையுடன் செயல்பட்டு வருகிறேன்.

நான் தவிசாளராக பதவியேற்றதன் பின்னர் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை மேம்படுத்தும் நோக்கில் வீதி அபிவிருத்தி, மின்விளக்கு பொருத்துவது போன்ற செயற்பாடுகளை நிறைவேற்றி வருகிறேன்.

எனினும் பிரதேச சபை எல்லைக்குள் இன்னும் பல உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்களை செயல்படுத்த வேண்டி உள்ளது என்பதையும் நான் அறிவேன்.

எனது ஆட்சிக் காலத்திற்குள் படிப்படியாக இக்குறைபாடுகளை என்னால் முடிந்தவரை நிறைவேற்றி வைக்க முடியும் என நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

-நூருல் ஹுதா உமர்

Related posts

“நாடாளுமன்ற கலாச்சாரத்தை மாற்றுவோம்” – பிரதமர்

யோஷித ராஜபக்ஷ மற்றும் டெய்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

editor

யோஷித ராஜபக்ச மற்றும் டெய்சிக்கு எதிராக பணமோசடி சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர நடவடிக்கை

editor