அரசியல்உள்நாடு

மகிழ்ச்சியான ஓய்வு வாழ்க்கை – தனியார் துறை ஊழியர்களிற்கு ஓய்வூதிய திட்டம் – அநுர

கௌரவமான மகிழ்ச்சியான ஓய்வு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்காக தனியார் துறை ஊழியர்களிற்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்துவோம் என்ற யோசனையை தேசிய  மக்கள் சக்தி முன்வைத்துள்ளதாக அதன் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கமொன்றின் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஒய்வுபெற்ற பலர் அவலம் நிறைந்த துன்பகரமான வாழ்க்கையை வாழ்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் ஓய்வுபெற்ற பின்னர் அனைவரும் கௌரவமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும் என தெரிவித்துள்ளார்.

நாட்டின் உற்பத்திக்கு தனியார் துறையினர் பெரும் பங்களிப்பு செய்கின்றனர் எவரும் இத்தனை வயது வரைதான் வேலை செய்யவேண்டும் என்ற ஒரு விடயம் உள்ளது ஓய்வுபெற்ற பின்னர் அனைவரும் கௌரவமான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவேண்டும் என தெரிவித்துள்ளதுடன் தனியார் துறை ஊழியர்களிற்கு பங்களிப்பு ஓய்வுதீய திட்டமொன்று எங்களிடம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

‘அவசர நிலை பிரகடனம் என்பது ஜனநாயக விரோத கொடூரமான செயல்’

அவசரநிலை : இராணுவத் தளபதி விசேட உரை

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு

editor