விளையாட்டு

மகளிருக்கான உலகக்கிண்ண கிரிக்கட் தொடர் ஜூனில் ஆரம்பம்

(UDHAYAM, COLOMBO) – மகளிருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச கிரிக்கட் சபை இதற்கான நிகழ்சி நிரலினை சர்வதேச மகளிர் தினத்தன்று வெளியிட்டது.

இந்த 50 ஓவர்களைக்கொண்ட இந்த கிரிக்கெட் போட்டித்தொடர் ஜூன் மாதம் 24ம் திகதி முதல் ஜூலை மாதம் 23ம் திகதி வரை நடைபெறவுள்ளதாக சர்வதேச கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

தகுதிபெற்றுள்ள அணிகள் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இலங்கை ,பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் ஒரு குழுவிலும் அவுஸ்ரேலியா இங்கிலாந்து இந்தியா மற்றும் நியூசிலாந்து மற்றைய குழுவிலும் இடம்பெறுகின்றன.

Related posts

இலங்கையின் வேகப்பந்தின் நிலை தொடர்பில் தென்னாபிரிக்காவை கதிகலங்க வைத்த விஷ்வ

அடுத்த வாரம் தேசிய கனிஷ்ட மெய்வாண்மை போட்டி ஆரம்பம்

இலங்கை சுற்றுப்பயணத்தில் பயமேன்