உள்நாடு

போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் இரகசிய வாக்குமூலம்

(UTV|கொழும்பு) – போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் உத்தியோகத்தர்கள் தொடர்பில் சுய விருப்பின் அடிப்படையில் 4 பேர், கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்னவின் அலுவலகத்தில் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக இரகசிய வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் இந்த சாட்சியாளர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை போதைப்பொருள் விற்பனை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் உத்தியோகத்தர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளுமாறு பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையை விசேட விசாரணை பிரிவினூடாக மேற்கொள்ளுமாறு பொலிஸ் போதைப்பொருள் பணியகம், பதில் பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளது.

Related posts

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம்

editor

அனைத்து தூர பிரதேச ரயில் சேவைகளும் இரத்து

முதல் தடவையாக வைத்தியசாலைகளில் 5,000ஐ கடந்த கொரோனா நோயாளிகள்