உள்நாடு

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மூன்று லொறிகள் – முக்கிய நபர் கைது

தங்காலை, சீனிமோதர பகுதியில் மூன்று லொறிகளில் கண்டுபிடிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ‘பெலியத்த சனா’ என்ற நபர் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை சீனிமோதர பகுதியில் வெளிநாட்டிலிருந்து இந்த நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு, மூன்று லொறிகளில் ஏற்றப்பட்டு போக்குவரத்துக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 700 கிலோகிராம் ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை பொலிஸார் சமீபத்தில் கண்டுபிடித்தனர்.

‘உனகுருவே சாந்த’ என்ற வெளிநாட்டு போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமானது என்று கூறப்படும் இந்தப் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்துவதில் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்ய பொலிஸார் தற்போது விசேட நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட கடத்தலில் ஈடுபட்ட ‘பெலியத்த சனா’ என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவர் இந்த கடத்தலில் ஈடுபட்ட முக்கிய சந்தேக நபரான ‘பூமித்தேலா’வின் நெருங்கிய கூட்டாளி என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், இந்த கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் மற்றொரு வீட்டையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

தங்காலை, மரகொலனிய பகுதியில் அமைந்துள்ள குறித்த வீட்டை, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களை மறைத்து வைக்கப் பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஐ.தே.கட்சியின் செயற்குழுவில் இருந்து இருவர் நீக்கம்

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

editor

விளையாட்டுத்துறை அமைச்சர் வௌியிட்ட விசேட வர்த்தமானி!