உள்நாடுபிராந்தியம்

போதைப்பொருளுடன் கைதான பெண் உட்பட மூவர் நிந்தவூர் பொலிஸாரால் விசாரணை!

நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனை செய்து வந்த இளம்பெண் உட்பட மூவர் சாகாமம் விசேட அதிரடிப்படையினரால்  கைது செய்யப்பட்டனர்.

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அட்டப்பள்ளம் பிரதேசத்தில் நீண்ட நாட்களாக போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இளம் பெண் தொடர்பில் சாகாமம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய செவ்வாய்க்கிழமை(24) மாலை  சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  பெண் உட்பட மூன்று  சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கையின் போது விசேட அதிரடிப் படையினருடன்   நிந்தவூர் பொலிஸ் நிலைய பொலிஸாரும்  இணைந்து இவர்களைக் கைது செய்தனர்.

27 ,32  வயதுக்கு உட்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து ஹெரோயின் போதைப் பொருட்கள் ஒரு தொகுதி மீட்கப்பட்டதுடன் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் கைதான சந்தேக நபர்களை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

-பாறுக் ஷிஹான்

Related posts

Update – உழவு இயந்திர விபத்து – இதுவரை 08 சடலங்கள் மீட்பு

editor

ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதி அநுரவுடன் சந்திப்பு

editor

சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட தேக்கமரப் பலகைகளையும், பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றிய பொலிஸார்

editor