உள்நாடு

போதைக்கு எதிரான சமூகம் – ஜும்ஆ உரையை நிகழ்த்த அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள்

எதிர்கால சமுதாயத்தினரை போதைப் பாவனையிலிருந்து விழிப்பூட்டல் மற்றும் சமூகத்திலிருந்து தீய பழக்கங்களை களைதல் உள்ளிட்ட செயற்பாடுகளை வலியுறுத்தும் வகையில், எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ உரைகளை நிகழ்த்துமாறு நாட்டிலுள்ள சகல பள்ளிவாசல்களுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது.

“போதையற்ற ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவோம்” என்ற தலைப்பில் இவ்வார ஜும்ஆ குத்பாவை (31) அமைத்துக் கொள்வதன் அவசியத்தையும் உலமாக்களுக்கு ஜம்இய்யத்துல் உலமா உணர்த்தியுள்ளது.

நாட்டில் பரவலாக வியாபித்துள்ள போதைப்பாவனை மற்றும் வர்த்தகம் என்பவற்றை ஒழிப்பதற்கு அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பது அவசியம்.

இவ்வாறான சமூக நலன்சார்ந்த விடயங்களில் இஸ்லாம் எடுத்தியம்பியுள்ள கடப்பாடுகளை தௌிவுபடுத்தி குத்பா பிரசங்கத்தை நடத்துமாறு சகல பள்ளிவாசல் நிர்வாகங்களையும் ஜம்இய்யத்துல் உலமா கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை – நாளைய வானிலை தொடர்பான அறிவிப்பு

editor

அரிசி இறக்குமதியின் போது பாரிய மோசடி இடம்பெற்றுள்ளது – முன்னாள் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர

editor

நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு