உள்நாடு

பொலிஸ், சிவில் பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்த நடவடிக்கை

(UTV|கொழும்பு)- எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு பாதுகாப்பு நடவடிக்கைக்காக சுமார் 84 ஆயிரம் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையினரை பணியில் ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இன்றைய தினம் இறுதி தீர்மானம் மேற்கொள்ளவிருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சுமார் 75 ஆயிரம் பொலிஸார் மற்றும் 9 ஆயிரம் சிவில் பாதுகாப்பு படையினரையும் சேவையில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

Xpress Pearl இனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் கொடுப்பனவு

ஓய்வூதிய திணைக்கள உத்தியோகத்தர்கள் என கூறி நிதி மோசடி