வகைப்படுத்தப்படாத

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக மீண்டும் ருவான் குணசேகர !

(UDHAYAM, COLOMBO) – முன்னதாக ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வந்த பிரியந்த ஜெயக்கொடி, மருத்துவ தேவைகளின் நிமித்தம் பதவியிலிருந்து விலகுவதாக தீர்மானித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து குறித்த பதவிக்கு ருவான் குணசேகர மீண்டும் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபராக பூஜித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டதன் பின்னர், அப்போது ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிவந்த ருவான் குணசேகர இடை நிறுத்தப்பட்டு பிரியந்த ஜெயக்கொடி நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆபத்தான மலை சரிவுகளில் வசிக்கும் மக்கள் உடனே வௌியேறவும் – தே.க.ஆ.அ

இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து நீக்கம்!

துனிசியா நாட்டில் அவசரநிலைச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு