கேளிக்கை

பொலிஸ் அவதாரத்தில் ஆண்ட்ரியா…

(UTV|INDIA)-பவானி என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் கமல் போரா வழங்கும் புதிய படத்தை ராஜேஷ் குமார் தயாரிக்கிறார்.

கன்னடத்தில் ‘தில்’ என்ற வெற்றி படத்தை இயக்கிய சத்யா இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா நாயகியாக நடிக்கிறார். ஜேகே, அசுதோஷ் ராணா, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
ஆக்‌ஷன், திரில்லர் கலந்த பேண்டஸி படமாக உருவாகும் இந்த இதில் ஆண்ட்ரியா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று தொடங்கியுள்ளது. படத்தின் பூஜையில் சத்யா, ஆண்ட்ரியா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகை – 66வது தேசிய விருது முழு விபரம் (video)

எமியின் திருமணம் நடக்கவுள்ள இடம் இதுதான்?

‘Tom and Jerry’ இயக்குனர் காலமானார்