சூடான செய்திகள் 1

பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் கைது

(UTV|COLOMBO)-பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட நபர் ஒருவர் திஹகொட பொலிஸ் நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு அதிவேக வீதியில் கட்டுமானப் பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற இயந்திர உபகரணங்களை அனுமதிப்பத்திரமின்றி டிபர் வண்டியில் கொண்டு செல்வதாக கிடைத்த தகவலுக்கமைய சுற்றிவளைப்பு நடத்தப்பட்டு நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிபர் வண்டியை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லும் போது அதில் இருந்த நபர் ஒருவர் 20,000 ரூபா பணத்தை பொலிஸ் அதிகாரிகளுக்கு இலஞ்சமாக கொடுக்க முற்பட்டுள்ளார்.

இதனையடுத்து திஹகொட பொலிஸ் நிலைய அதிபருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இலஞ்சப் பணத்தை பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கும் போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயது மற்றும் 54 வயதுடைய திக்கெவ்லை பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று இருவரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளனர்.

 

 

 

 

Related posts

தொலைபேசி உரையாடலில் இருப்பது நாலக சில்வா மற்றும் நாமல் குமாரவின் குரல் என்பது உறுதியானது

மோல்டாவில் நிதி முதலீடும் : அயர்லாந்தில் வீடும் – அநுரவின் பதில் என்ன?

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் காவற்துறை மா அதிபருக்கு எதிரான மனு 21ம் திகதி விசாரணைக்கு