உள்நாடு

பொலிஸாரை தாக்கிய பாடசாலை மாணவர்கள் – கைது.

(UTV | கொழும்பு) –

கல்கிஸ்ஸை பகுதியில் இரண்டு பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய ஐந்து பாடசாலை மாணவர்கள் உட்பட ஆறு பேரை கைது செய்ததாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாறைகள் நிறைந்த கடலோரக் பகுதியில் குடிபோதையில் சிலர் பாதுகாப்பற்ற முறையில் நீராடுவதாக கல்கிஸ்ஸை பொலிஸ் கரையோரப் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிசார் கூறுகையில், அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்ததில், பாதுகாப்பற்ற இடத்தில் 6 பேர் குளிததுக்கொண்டிருந்தமை தெரியவந்தது.

அந்த இடம் குளிப்பதற்கு பாதுகாப்பற்றது என எச்சரித்து மக்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து, குறித்த குழுவினர் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி வன்முறையில் ஈடுபட்டதுடன், நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் சென்ற போது, ​​குறித்த குழுவினர் பொலிஸாரை தாக்கியுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 16 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட ரத்மலானை மற்றும் பிலியந்தலை அஹுங்கல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஆசிரியர் பணி கௌரவமான தேசிய சேவையாக கருதப்பட வேண்டும் – ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor

பாராளுமன்ற தேர்தலை நடத்த நிதி ஒதுக்கப்படவில்லை

editor

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ரோமானிய தூதுவர் Steluta Arhire

editor