உள்நாடு

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பு – மேலும் பலர் கைது

இலங்கை பொலிஸார் நாடு முழுவதும் நடத்திய குற்றவியல் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விசேட நடவடிக்கையின் கீழ் பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய மேலும் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது 27,890 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 743 பேரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 253 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமை தொடர்பில் மேலும் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்த நடவடிக்கை

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் உயர்வு

தேர்தல் மத்திய நிலையங்களை தொற்று நீக்கம் செய்ய நடவடிக்கை