உள்நாடுபிராந்தியம்

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் – துரத்திச் சென்ற துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் – மூவர் கைது

நிட்டம்புவவில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வேன் ஒன்றை துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இன்று (01) அதிகாலை 1.15 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்ட நிலையில், வேனில் பயணித்த மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கம்பஹா பிரிவு பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உட்பட அதிகாரிகள் குழு, நிட்டம்புவ – கட்டுநாயக்க வீதியில் உதம்விட சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது, வேயங்கொடையிலிருந்து நிட்டம்புவ நோக்கி சந்தேகத்திற்கிடமான முறையில் வேன் ஒன்று பயணித்துக் கொண்டிருந்தது.

வேனை நிறுத்துமாறு சைகை செய்தபோது, அது தொடர்ந்து சென்றது.

பின்னர், பொலிஸ் அதிகாரிகள் வேனைத் துரத்திச் சென்று, நிட்டம்புவவில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் எரிந்து கொண்டிருந்த போது, T-56 துப்பாக்கியால் வேனின் முன் மற்றும் பின் வலது சக்கரங்களில் சுட்டனர்.

இதனையடுத்து, வேனில் பயணித்த மூன்று பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அதிக அளவில் குடிபோதையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி லெல்லொபிட்டிவைச் சேர்ந்தவர் என்றும், ஏனைய இருவரும் இரத்தினபுரி சேர்ந்தவர்கள் என்றும் கூறினர்.

சந்தேகநபர்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதா? என்பதைப் பரிசோதிக்க சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளனர்.

அவர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

Related posts

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் விபரம்

300 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களை இலங்கைக்கு வழங்கிய ஜப்பான் அரசு

editor

ஆர்ப்பாட்டம் காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல்