உள்நாடு

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த பெண்ணுக்கு மீண்டும் விளக்கமறியல்

போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க முற்பட்ட போது, பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த மற்றும் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கம்பஹா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதன் பின்னர், நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் 46 வயதான தெமட்டகொடை பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஆவார்.

மோட்டார் வாகனத்தில் பயணித்த குறித்த பெண்ணை போக்குவரத்து விதிமீறல் தொடர்பில் நிறுத்துவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முயற்சித்த போது, அவர் பொலிஸ் கட்டளையை மீறி காரை செலுத்திச் சென்றுள்ளார்.

Related posts

ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் பிரதமர் தலைமையில்

கொரோனாவினால் உயிரிழக்கும் உடல்களை அடக்க தனித்தீவு அறிவிப்பு