காலி முகத்திடல் வீதியில் உள்ள மின் கம்பமொன்றின் மீது ஏறி நபர் ஒருவர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
களனி பொலிஸாரால் தமக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறியே அவர் இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரரை மீட்டு அவருக்குத் தேவையான முதலுதவிகளை வழங்கும் நோக்கில் 1990 அவசர நோயாளர் காவு சேவை அதிகாரிகளும் அவ்விடத்திற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
