உள்நாடுசூடான செய்திகள் 1

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது நீதிமன்றம் தீர்ப்பு

(UTV | கொழும்பு) –

பொருளாதார உருமாற்ற சட்டமூலத்தின் பல சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றில் இன்று தெரிவித்தார்.

அதன்படி, சட்டமூலம் பாராளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மையால் மட்டுமே நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

எனினும் அந்த சரத்துகள் திருத்தப்பட்டால் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன பாராளுமன்றில் மேலும் தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர பதவியேற்பு

நீர் விநியோகத்தில் மின்சாரத்தை விட விவசாயத்திற்கே முன்னுரிமை அளிக்கப்படும்

விபத்தில் படுகாயமடைந்த உபபொலிஸ் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!