உள்நாடு

பொரளையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – இருவர் கைது

பொரளை, காதர்நானா பகுதியில் கடந்த 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு உதவிகளை வழங்கியதாக சந்தேகிக்கப்படும் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்களுடன் துப்பாக்கிச் சூட்டுக்காக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர்களை பொரளை பொலிஸார் வெல்லம்பிட்டி பகுதியில் வைத்து கைது செய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கைதான சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தேசிய அடையாள அட்டை தொடர்பான புதிய அறிவிப்பு

தேர்தல்கள் ஆணையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

களியாட்ட விடுதியில் ஒருவர் பலி