உலகம்

பொய் செய்தி வெளியிட்டால் கடும் தண்டனை – பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்

தென்கொரியாவில் பொய் தகவல்களை பரப்பும் செய்தி நிறுவனங்கள் மற்றும் இணைய ஊடகங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கும் சட்டமூலம் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தென்கொரியாவில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த லீ ஜே மியுங் தலைமையிலான அரசு சர்ச்சைக்குரிய இச்சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது.

செய்தி நிறுவனங்களும், யூடியூப் சேனல்களும், சட்டவிரோதமானதும், பொய்யானதுமான தகவல்களை, தீங்கு விளைவிக்கும் அல்லது இலாப நோக்கத்துடன் பரப்பினால், நீதிமன்றங்கள் ஐந்து மடங்கு வரை அபராதம் விதிக்கும் வகையிலான விதிகள் அச்சட்ட ஏற்பாட்டில் உள்ளக்கட்டப்பட்டுள்ளது.

இதன்படி குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிக அபராதம் விதிக்கப்படவும் அந்த சட்டம் வழிவகுக்கிறது.

அத்துடன் கடுமையான சிறை தண்டனை உள்ளிட்டவைகளும் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

அந்நாட்டில் அதிகரித்து வரும் போலி செய்திகள் மற்றும் தவறான தகவல்கள், சமூக பிளவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி ஆளும் அரசு இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

ஆனால் எதிர்க்கட்சியினரும், பத்திரிகையாளர் அமைப்புகளும் இது கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயல் என கண்டனம் தெரிவித்துள்ளன.

Related posts

கொரோனா வைரஸ்; 16 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

வடக்கு ஏமனில் ஆப்பிரிக்க குடியேறிகள் தங்குமிடம் மீது அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 68 பேர் பலி

editor

இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஜப்பான் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது – இந்திய பிரதமர் நரேந்திர மோடி

editor