உள்நாடு

பொத்துவில் – பொலிகண்டி ஆர்ப்பாட்டம் நான்காவது நாளாக இன்றும்

(UTV | அம்பாறை) – பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான அகிம்சை வழி போராட்டம் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான மாபெரும் போராட்டத்தின் நான்காம் நாள் பேரணி வவுனியா நகரில் ஆரம்பித்து மன்னாரை நோக்கி இன்று(06) முன்னோக்கி செல்கிறது.

தமிழ், முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை முன்நிறுத்தி, பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான கவனயீர்ப்பு போராட்டம் கடந்த 03ம் திகதி ஆரம்பமானது.

வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்கள் மற்றும் தமிழ்த் தேசிய கட்சிகளின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் இந்த தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம், காணிகள் சுவீகரிக்கப்படுதல், முஸ்லிம்களின் ஜனாசாக்கள் கட்டாயத் தகனம் செய்யப்படுதல் மற்றும் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கோட்டாபயவின் தாய்லாந்து விஜயம் தொடர்பில் அந்நாட்டு பிரதமரின் அறிவிப்பு

டயானா எம்.பியின் பாராளுமன்ற உறுப்புரிமை பதவியை வறிதாக்கி உயர்நீதிமன்றம் உத்தரவு !

ரயில் சேவைகள் மந்தகதியில்