உள்நாடுபிராந்தியம்

பொத்துவில் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

அம்பாறையில் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று புதன்கிழமை (23) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் பொத்துவில் பகுதியை சேர்ந்த 40 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பிரதமரின் நத்தார் தின வாழ்த்து

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

SMS அனுப்பும் பசில் ராஜபக்ஷ!