உள்நாடு

பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

(UTV|கொழும்பு) – புதிய கொரோனா வைரஸ் நாட்டில் பரவுவதை தடுப்பதற்காக பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்தப்படும் பஸ், ரயில்களில் கிருமிகளை அழிக்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகின்றது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கை பாதுகாப்பு பிரிவின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக கொழும்பு கோட்டை ரயில் நிலையம் மற்றும் புறக்கோட்டை பஸ் திரப்பு நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு கைகளைக் கழுவுவதற்கான வசதிகளை செய்து கொடுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இன்று முதல் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது

Related posts

தீர்ப்பை அறிவித்தார் சபாநாயகர்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.கா பிரதிநிதிகள்.

editor

சமகி ஜன பலவேகயவின் தலையைகம் திறப்பு [VIDEO]