வகைப்படுத்தப்படாத

பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புப் பற்றி கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – சுகாதாரப் பிரிவினர்

(UDHAYAM, COLOMBO) – வெசாக் தினத்திற்கு அமைவாக தான நிகழ்வுகள், பந்தல்கள், தோரணங்கள் என்பனவற்றை ஒழுங்கு செய்யும் போது பொதுமக்களின் பாதுகாப்பு பற்றியும், உயிர் பாதுகாப்பு தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டுமென்று சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வோர், பொதுச் சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டலுக்கு அமைய செயற்படுவது அவசியமாகும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஜயசுந்தர பண்டார வலியுறுத்தியுள்ளார்.

சகல தான நிகழ்வுகளையும் பதிவு செய்வது அவசியமாகும். சுத்தமான நீரை போதுமான அளவில் பெற்றுக் கொள்ளகூடிய இடங்களில் மாத்திரம் இதனை ஒழுங்கு செய்வது அவசியமாகும். விபத்துக்கள் ஏற்படாதவாறு பந்தல்களும் தோரணங்களும் அமைக்கப்படுவது அவசியமாகும். வெசாக் தினத்தில் பயன்படுத்தப்படும் பொலித்தீன், உணவுப் பொதி என்பவற்றினால் டெங்கு நுளம்பு குடம்பிகளும் பெருகும் ஆபத்து காணப்படுகின்றது. இவற்றை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சுகாதார அதிகாரிகள் பொது மக்களின் கவத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

Related posts

200,000 packages at Mail Exchange due to strike

Peradeniya Uni. Management Faculty to reopen next week

மன்னிப்பு கோரிய சக்கர்பேக்