சூடான செய்திகள் 1

பொதுபல சேனா தேரர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் – உடனடியாக விசாரணை செய்யுமாறு பணிப்பு

(UTV|COLOMBO)-பொதுபல சேன அமைப்பினர் இன்று (19) மகஜர் ஒன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த சந்தர்ப்பத்தில் அவர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொண்ட விடயம் தொடர்பில் ஜனாதிபதி அறிக்கை ஒன்றின் ஊடாக ஜனாதிபதி தனது கவலையை தெரிவித்துள்ளார். 

அத்துடன் தேரர்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் மேற்கொள்ள உத்தரவிட்டவர்களுக்கு எதிராக உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஞானசார தேரரின் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் தேரர்களினால் வழங்கப்பட்ட மகஜரை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி அவ்விடயம் குறித்து தேரர்களுடன் கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

 

Related posts

நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதன் பொறுப்பை சபாநாயகர் ஏற்க வேண்டும்

கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

இருவேறு பகுதிகளில் இருந்து பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது