உள்நாடு

பேரூந்து சாரதிகள் – நடத்துனர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை

(UTV|கொழும்பு) – பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு சிறப்பு மருத்துவ பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெறும் பேரூந்து விபத்துக்களில் பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் பல்வேறுபட்ட நோய் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளமையால் ஏற்படுகின்றமை தெரிய வந்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா தெரிவித்துள்ளார்.

இந்நிலமையை கருத்திற்கொண்டு இவர்களுக்கு வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த வைத்திய பரிசோதனை முகாம் இன்று(10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கொழும்பில் உள்ள பிரதான தனியார் பேரூந்து நிலைய வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இந்த மருத்துவ பரிசோதனையில் அனைத்து பேரூந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களும் பங்குபற்ற வேண்டும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரென்டா மேலும் கூறியுள்ளார்.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிப்பதற்கு, மற்றுமொரு சந்தர்ப்பம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் உடல் நிலை குறித்து தகவல் வெளியிட்ட நாமல் எம்.பி

editor

அவந்தி தேவி : தலைமை வார்டனுக்கு விளக்கமறியல்