சூடான செய்திகள் 1

பேரூந்து கட்டண குறைப்பு-கலந்துரையாடலை ஒத்திவைக்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO)-அண்மையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டதற்கு நிகராக பேரூந்து கட்டணங்கள் திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இம்மாதம் 21ம் திகதி இடம்பெறவிருந்த நிலையில், குறித்த கலந்துரையாடலினை 07 நாட்களுக்கு பிற்போடுமாறு, பேரூந்து சங்கங்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நிலவும் அரசியல் மாற்றங்கள் காரணமாக குறித்த கலந்துரையாடலை 07நாட்களுக்கு ஒத்திவைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் கோரியுள்ளதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்தார்.

 

 

 

 

 

Related posts

லண்டனில் இருந்து நாடு திரும்பிய 207 இலங்கை மாணவர்கள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தாடி வைத்தமைக்காக பரீட்சை அறையில் இருந்து மாணவர் வெளியேற்றம்

பிரபல பாடகர் சிரில் பெரேரா காலமானார்