உள்நாடு

பேருந்து விபத்தில் 20 பேர் மருத்துவமனையில்

(UTV|மாத்தளை ) – தம்புள்ளை மாத்தளை வீதியின் நாவுல பிரதேசத்தில் இன்று(21) காலை இரண்டு தனியார் பேருந்துகள் பாரவூர்தி ஒன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது

சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளர.

விபத்தில் காயமடைந்த நபர்கள் தற்போதைய நிலையில் நாவுல, தம்புள்ள மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கவலைக்கிடமான நிலையில் உள்ள 7 பேர் மாத்தளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நாவுல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

பஸ் கட்டணங்கள் குறையலாம்!

யுனெஸ்கோ உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் ஹரிணி பிரான்ஸ் விஜயம்

editor

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி விவகாரம் – துமிந்தவின் பிணை மனு தொடர்பில் விசாரணை திகதி அறிவிப்பு

editor