உள்நாடுபிராந்தியம்

பேருந்து மோதியதில் 35 வயதுடைய கிராம உத்தியோகத்தர் பலி

மாத்தளை – கைகாவல பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்தார்.

அவர் தொழிலுக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இதன்போது சம்பவ இடத்திலேயே கிராம உத்தியோகத்தர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் மாத்தளை, ரத்தோட்டை கைகாவல பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய கிராம உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டதுடன் ரத்தோட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நாடு திரும்பிய 290 இலங்கையர்கள்

பொத்துவில் பிரதேச சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வசம் – முன்னாள் எம்.பி முஷாரப் தவிசாளர்

editor

ஓய்வுபெற்ற ஆசிரியர் அதிபர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க அதிகபட்ச ஒத்துழைப்பைப் பெற்றுத் தருவேன் – சஜித் பிரேமதாச

editor