வகைப்படுத்தப்படாத

பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழப்பு

(UTV|ZIMBABWE)-சிம்பாப்வே நாட்டில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 47 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பொலிசார் மற்றும் மீட்புக்குழுவினர் உடனடியாக அந்த இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

கூகுள் நிறுவனம் அரசியல் பாரபட்சத்துடன் இயங்கவில்லை

கனேடிய பிரதமர் இந்தியா விஜயம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு என்றுமில்லாத அளவு பாதுகாப்பு அச்சுறுத்தல்