சூடான செய்திகள் 1

பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் சில முறைப்பாடுகள்

(UTV|COLOMBO)  கடந்த ஜனவரி மாதம் மாத்திரம் 450 முறைப்பாடுகள் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில்  கிடைத்திருப்பதாக மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் நிர்வாக உத்தியோத்தகர் ஜீவித்த கீர்த்திரட்ன தெரிவித்துள்ளார்.

பொது போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமர்ப்பிப்பதற்காக, ஒரு நாளில் 24 மணித்தியாலங்களும் இயங்கக் கூடிய 0112 860 860 என்ற தொலைபேசி இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டது.

பாதுகாப்பற்ற முறையில் பேரூந்து செலுத்துதல், அதிக இரைச்சலுடன் வானொலியை ஒலிக்க விடுதல் மற்றும் பயணிகளை கௌரவ குறைவான முறையில் நடத்துதல் போன்றவை தொடர்பாக அதிக முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை பயிற்சி

பொதுமக்களுக்கான ஓர் அவசர அறிவிப்பு

editor

ஆனமடுவ உணவக தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது