உள்நாடு

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு

பயணச் சீட்டு இன்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு நாளை (01) முதல் அபராதம் விதிக்கப்படும் என மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.

அதேநேரம் பயணச் சீட்டுக்களை வழங்காத நடத்துனர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அதன் செயல்பாட்டு முகாமையாளர் ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே, நாளை முதல், மேல் மாகாணத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்கப்படுதலும், அதில் பயணிக்கும் பயணிகள் பயண நேரத்தின் போது அதனை தம்வசம் வைத்திருப்பதும் கட்டாயமானதாகும் என அவர் சுட்டுக்காட்டியுள்ளார்.

Related posts

ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 4018 பேர் கைது

மஹிந்த, நாமலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் – ரோஹித்த அபேகுணவர்தன

editor

மேலும் 2 கடற்படையினர் பூரண குணம்