அரசியல்உள்நாடு

பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு உலக வங்கிப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் சஜித்

டித்வா சூறாவளி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட கடுமையான பேரிடர் நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் உலக வங்கியின் இலங்கை பிரதிநிதிகள் குழுவுடனான விசேட சந்திப்பொன்று இன்று (02) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இலங்கை மற்றும் மாலைதீவுகள் ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் வதிவிடப் பிரதிநிதி கிவோர்க் சார்கஸ்ஜான் (Gevorg Sargsyan) மற்றும் உலக வங்கியின் சிரேஷ்ட செயற்பாட்டு அதிகாரி திரு. அசேல திசாநாயக்க ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

பேரனர்த்தம் மற்றும் அதன் பிற்பாடு ஏற்பட்டுள்ள அதன் தற்போதைய தாக்கம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக வங்கிப் பிரதிநிதிகளுக்கு இங்கு விளக்களித்ததோடு, இதுவரை மனித உயிர்கள், சொத்துக்கள் மற்றும் பெருமளவிலான உட்கட்டமைப்பு வசதிகள் அழிந்து, சேதமடைந்துபோயுள்ள விதம் தொடர்பிலும் எடுத்துக்காட்டினார்.

இதன் பிரகாரம், இந்த உட்கட்டமைப்பு வசதிகளை புனர்நிர்மாணம் செய்து, மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கும், அழிந்துபோய்யுள்ள, சேதமடைந்துபோயுள்ள சொத்துக்கள் மற்றும் தொழில்முயற்சிகளை மீண்டும் கட்டியெழுப்பி, மக்களை மீண்டும் தூக்கு விட்டு பக்கபலத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கும் தேவையான உதவி ஒத்துழைப்புகளை இலங்கைக்குப் பெற்றுத் தருமாறு உலக வங்கி பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

அண்மைய காலத்தில் ஏற்பட்ட பொருளாதார வங்குரோத்து நிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், நுண், சிறிய மற்றும் நடுத்தர முனைவோருக்கு, தொழில்முயற்சியாண்மைகளுக்கு இந்த பேரிடர் சூழ்நிலை மீண்டும் ஒருமுறை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமையினால், இவர்களையும் இவர்களினது தொழில் முயற்சியாண்மைகளையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான உதவுகளை, ஒத்துழைப்புகளை பெற்றுத் தருமாறும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் கேட்டுக் கொண்டார்.

Related posts

இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி – மூவர் காயம் – யட்டியந்தோட்டையில் சோகம்

editor

வெளிநாட்டுக்கு செல்வோருக்கு அரசு விடுத்துள்ள அறிவிப்பு

டெங்கு நோயால் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு