உள்நாடு

பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது.

மின் கட்டணம் குறைவடைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலையை குறைக்க முடியாது என பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பேக்கரி பொருட்களுக்கு தேவையான மா, சீனி, முட்டை மற்றும் மாஜரின் ஆகியவற்றின் விலை குறைக்கப்படாமையே இதற்கான காரணம் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்  தெரிவித்துள்ளார் .

இதேவேளை,  மின்சாரக் கட்டணக் குறைப்பு காரணமாக சில உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும்,  முட்டையின் விலை மீண்டும் அதிகரிக்குமானால் உணவுப் பொருட்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் 2  பேர் பூரணமாக குணமடைந்தனர்

இன்றைய வானிலை (Weather Update)

இராஜினாமாவுக்கு தயாராகும் பசில் – நாளை விசேட உரை