உள்நாடு

பேக்கரி உற்பத்திகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுகிறோம்

(UTV | கொழும்பு) – பாண் ஒன்றின் விலை 100 ரூபாவிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜெயவர்தன தெரிவிக்கின்றார்.

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டு காரணமாக இந்நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், எரிபொருள் தட்டுப்பாடு தமது வர்த்தகத்தை கடுமையாக பாதித்துள்ளதாகவும், சுங் பான் வாகனங்கள் பல ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோதுமை மாவு தட்டுப்பாட்டினால் சுமார் 400 பேக்கரிகள் ஏற்கனவே தமது உற்பத்தியை நிறுத்திவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்நாட்களில் மின்சாரம் தடைப்படுவதால் உற்பத்தி நடவடிக்கைகளைத் தக்கவைத்துக் கொள்ள பெரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் எதிர்காலத்தில் ஏனைய உணவுப் பொருட்களின் விலைகள் உயரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், நாளுக்கு நாள் தனது தொழில்துறை எதிர்கொள்ளும் பொருளாதார பிரச்சினைகளால் பணியாளர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

தற்போதுள்ள அனைத்து பிரச்சினைகள் குறித்தும் அரசுக்கு தெரியப்படுத்தியும் எந்த பதிலும் கிடைக்காததால் பொதுமக்கள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

இன்று மாலை விசேட சாேதனை நடவடிக்கை

கம்பளையில் காணாமல்போன Fathima Munawwara கொன்று புதைப்பு! CCTV VIDEO

வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள வேண்டுகோள்